பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி

மும்பை : உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், பங்குச்சந்தைகளை நிலை குலைய செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வருகிறது. பல உயிர்களை பழிவாங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவும், ரூபாயின் மதிப்பு சரிவு, பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்வது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.